ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்

326 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

யாழ்ப்பாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள ‘ஜனாதிபதியிடம் முறையிடுங்கள்’ என்ற பிராந்திய காரியாலயத்தை அவர் இன்று திறந்துவைக்கவுள்ளார்.

அத்துடன், பலாலி வானூர்தி தளத்தில் இராணுவத்தினர் தொடர்பான நிகழ்வொன்றிலும் பங்கேற்க உள்ளார்.

இதையடுத்து, பலாலி வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக கையளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.