பாடசாலை வேன் கட்டணம் குறித்து எடுத்துள்ள தீர்மானம்!

127 0

எரிபொருட்களின் விலை குறைவினால் பாடசாலை வேன் கட்டணத்தை குறைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல் ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், விலையை சதவீதமாக குறைப்பது கடினம் எனவே பேசி விலையை தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதேவேளை, எரிபொருள் விலை குறைப்பின் அனுகூலத்தை பஸ் கட்டணத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளில் இருந்தும் மக்களுக்கு வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைந்தாலும் ரயில் கட்டணத்தை குறைக்க இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணங்கள் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.