பஸ் கட்டணங்கள் இன்று முதல் குறைகின்றன

62 0

டீசல் விலை குறைப்புடன் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் எனவும் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக அமையும்  எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திலான் மிராண்டா தெரிவித்தார்.

மேலும் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் டீசல் விலை ரூ.105 ஆக குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு புதிய பஸ் கட்டணங்கள் கணக்கிடப்படும் என்றும் புதிய பஸ் கட்டணம் இன்று (29) மாலை 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.