பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை- மகிந்த

230 0

முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பாக தனக்கு எந்த கவலையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான நடைமுறைகள் ஊடாக சரத் பொன்சேகா செய்த குற்றத்திற்கு தண்டனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.வெலிகடையில் சில கைதிகளின் நலன் விசாரிப்பதற்காக சென்று விட்டு வெளியில் வந்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மகிந்த ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் பொதுவேட்பாளராக போட்டியிட்டார்.தேர்தலில் தோல்வியடைந்த பின்னர்இ பொன்சேகா கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக சிவில் மற்றும் இராணுவ நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.தன்னை எதிர்த்து போட்டியிட்டால்இ அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கிலேயே சரத் பொன்சேகாவை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சிறையில் அடைத்ததாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.