பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணங்களை ஏற்க முடியாது

216 0

பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசியல் தலையீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பதவி நீக்கம் செய்ய அரசியல் தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் வகையிலான பதில் செவ்வாய்க்கிழமை (28) நிதி,பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மின்கட்டண அதிகரிப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் முதல்வாரத்தில் இடம்பெற்ற முதலாவது கூட்டத்தில் அனுமதி வழங்கியது.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமைய  மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அனுமதி வழங்கவில்லை.

மின்கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை வழங்கிய அங்கிகாரத்திற்கு எதிராக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் செயற்படுகிறார்,மின்கட்டமைப்பு விநியோகத்தில் அவர் நெருக்கடியை தோற்றுவித்துள்ளார்.

ஆகவே அவரை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் வகையில் குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தனிப்பட்ட காரணிகளுக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்த போது ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் அனுமதியுடன் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு புறம்பாக மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என வலியுறுத்தி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு கடந்த 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்வதற்காக முன்மொழியப்பட்ட காரணிகளை நிதியமைச்சு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது,இந்த காரணிகளை தான் நிராகரிப்பதாக சுட்டிக்காட்டி, அதற்கான பதிலை அனுப்பி வைத்ததாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயபக்க குறிப்பிட்டார்.