 பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் அவுஸ்திரேலிய வாழ் தமிழரொருவர் பலியாகியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் அவுஸ்திரேலிய வாழ் தமிழரொருவர் பலியாகியுள்ளார்.
இந்த விமான விபத்தில் அவுஸ்திரேலிய வாழ் தமிழரான கார்த்தி சந்தானம் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது இறுதி நிகழ்வு இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்றுள்ளது.
பிலிப்பைன்ஸ் தளமாகக்கொண்ட Energy Development Corporation (EDC) நிறுவனத்தில் தொழிநுட்ப ஆலோசகராக இவர் கடமையாற்றியுள்ளார்.
இவர் நான்கு பேருடன் Bicol சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானி மற்றும் விமானப்பணியாளர்களுடன் இலகுரக விமானத்தில் பயணித்த போது கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் Mount Mayon எரிமலைப்பகுதியில் விபத்திற்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கார்த்தி சந்தானம் தனது குடும்பத்துடன் அடிலெயிட் நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            