
மருதானை நோக்கிச் சென்ற காலிகுமாரி கடுகதி ரயில் இன்று (27) வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது. எனினும், யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து வாதுவ தல்பிட்டிய ரத்நாயக்க வீதிக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியானது கடவை வழியாக சென்றபோது அதன் இயந்திரம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சாரதி முச்சக்கரவண்டியை விட்டிறங்கி, இரு பெண்களையும் கீழிறக்கி கடவையை கடந்து அழைத்துச் சென்றுவிட்ட நிலையில் அவ்வழியே வந்த ரயில் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
இதில் அதிர்ஷ்டவசமாக சாரதி மற்றும் இரண்டு பெண்களும் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி மானியம் பெறுவதற்காக குறித்த இரண்டு பெண்களும் தல்பிட்டிய சமுர்த்தி வங்கிக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

