காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை தம்புள்ளை – பக்கமுன பிரதான பாதையில் 13 ஆம் இலக்க தூணுக்கு அருகில் குறித்த நபர் இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளானதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான நபர் தொடர்பில் பக்கமுன வனவிலங்கு அலுவலகத்திற்கு பாதையில் பயணித்த சிலர் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அலுவலக அதிகாரிகள் வந்து குறித்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அதிகாரிகள் படுகாயமடைந்தவரை மருத்துவனைக்கு கொண்டு செல்லவதற்காக வாகனம் ஒன்றை நிறுத்தி கொள்ள ஒரு மணிநேரம் முயன்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தம்புள்ளை காவற்துறையின் தலையீட்டில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளான நபர், தம்புள்ளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

