வவுனியா பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு இலக்காகி ஒருவர் பலி

315 0
வவுனியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு   சிகிச்சை பெற்று வந்த இளம் தாயொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொட‌ர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பெப்ரவரி மாதம்  22, ஆம் திகதி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர்   உயிரிழந்துள்ளார்.
இந்த நோயினால்  ஹெப்பிட்டிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 25, வயதுடைய இளம்  பெண் குழந்தை பிறந்து ஒரு கிழமை கடந்த நிலையில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு  உள்ளகி தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.
இதே வேளை ,
37 வயதுடைய வவுனியா  பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றிக்காச்சல் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலை‌யி‌ல் அதிதீவிர சிகிச்சைப்பிரில் வைத்து  சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில்  அவரது  உடல் நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இது தவிர மேலும் ஐவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட  வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள
பன்றிக்காச்சல் ஏற்பட்டவர்களை பார்வையிடுவதற்கு வருகை தரும் போது  கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம் என அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.