பெண்களுக்கு தனி பட்ஜெட்: பேரவையில் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

69 0

குஜராத்தைப் போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.

பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: வானதி சீனிவாசன் (பாஜக): கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன. மக்கள் பெரிதும் அவதிப்படுவதால், சாலைகளைச் சீரமைக்கஅரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: கோவையில் சாலைகளைச் சீரமைக்க முதல்வர் ரூ.200 கோடியைசிறப்பு நிதியாக ஒதுக்கியுள்ளார். ரூ.90 கோடியில் சாலைப்பணிகள் நடைபெறுகின்றன. 116 மண் சாலைகள், தார்சாலைகளாக மாற்றப்படுகின்றன. கோவை தெற்கு தொகுதியில் மார்ச் 25-ம் தேதி (இன்று) ரூ.14 கோடியில் சாலை பணிகள் தொடக்க விழா நடைபெறுகிறது.

குஜராத்தைப் போல…

வானதி சீனிவாசன்: பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக கோவை மக்களுக்கு 15 முதல்20 நாட்களுக்கு ஒருமுறைதான் சிறுவாணி தண்ணீர் கிடைக்கிறது.

குஜராத் மாநிலத்தைப்போல, தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர். மது குடிப்பவர்களின் மனைவிகள் பெரிதும் அவதிப்படுவதால், எந்த திட்டமானாலும் சமூகக் கண்ணோட்டத்துடன் அரசு அணுக வேண் டும்.

சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்: பாலின வரவு, செலவு திட்டம் குறித்த பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமூக நலத் துறை மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளில்பெண்களுக்கான நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

துறை வாரியாக மகளிர்திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி, செயல்பாடுகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இப்பணி முடிந்ததும், பாலின வரவு-செலவு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் கைம்பெண்கள் நல வாரியம்அமைப்பது தொடர்பானதரவுகள் சேகரிக்கப்படுகின் றன. அதற்கான சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும். சத்துணவுப் பணியாளர்களுக்கான இடங்களில் 25 சதவீதம் விதவைகளுக்கு ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.