ஹெரோயின் மற்றும் கஞ்சாவையும் தம்வசம் வைத்திருந்த இரண்டு பேர் பணந்துறை மற்றும் வத்தளை பிரதேசங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3.600 கிராம் ஹெரோயுனுடன் பாணந்துறை – எலுவில பிரதேசத்தில் வைத்து 42 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவருடன், களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கேரள கஞ்சா 14 கிலோ கிராமுடன் வத்தளை பிரதேசத்தில் வைத்து நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பிரதேசத்தை சேர்ந்த அவர், இந்த கஞ்சா தொகையை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற போது வத்தளை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

