இறக்குமதி முட்டைகள் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

243 0

பேக்கரி தொழில்துறை உற்பத்திகளுக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பெற்றுக் கொடுக்க இன்னும் 3 நாட்கள் ஆகும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் ஆய்வின் பின்னர் அவை விடுவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ,

“முட்டையை இறக்குமதி செய்ய வேண்டும் என்று அமைச்சரவை உபகுழு ஏகமனதாக தீர்மானம் எடுத்தது. அதனாலேயே முட்டையை இறக்குமதி செய்தோம். இன்று குறித்த முட்டைத் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அதன்படி, மூன்று நாட்கள் ஆய்வு செய்ய கேட்டுள்ளனர்… எனவே அதற்கும் வாய்ப்பளித்துள்ளோம். உலகின் உயர்தரம் பார்க்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் முட்டை வழங்கும் நிறுவனம் இந்த நிறுவனம். அந்த அனைத்து சான்றிதழ்களையும் கருத்திற் கொண்டுதான் இந்த முட்டைகளை இறக்குமதி செய்துள்ளோம். எனவே நாளை மறுநாள், இந்த முட்டைகள் மக்களுக்குக் கிடைக்கும்.”