பசறையை உலுக்கிய விபத்து! தந்தை மகன் பலி!

174 0

மொனராகலை வீதியில் பசறை மூன்றாம் தூண் பிரதேசத்தில் நேற்று (21) மாலை 3.00 மணியளவில் மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பசறை மீதும்பிட்டிய கலபடவத்தையைச் சேர்ந்த மனோகரன் டில்ஷான் (வயது 19) மற்றும் ஆறுமுகம் மனோகரன் (வயது 50) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற டில்ஷான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் அமர்ந்து சென்ற ஆறுமுகம் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (22) காலை உயிரிழந்துள்ளார்.

பசறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று மற்றுமொரு லொறியை கடக்க முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பில் இரண்டு லொறிகளின் சாரதிகளும் பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.