கை விலங்கிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் முடியவில்லை

217 0

கை விலங்கிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை பாதுகாப்பதற்குக் கூட அரசாங்கத்தினால் முடியவில்லை என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,கைவிலங்கு இடப்பட்ட சந்தேக நபர்களின் உயிர்களை பாதுகாக்க முடியாத அரசாங்கம் எவ்வாறு தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும்?

தேசியப் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என அரசாங்கம் ஊடகங்களின் முன்னிலையில் பிரச்சாரம் செய்கின்றது.எனினும் உண்மை எது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.நாட்டை ஆட்சி செய்வது நல்லாட்சி அரசாங்கமா அல்லது மறைந்து போயிருந்து மீளவும் தலைதூக்கியுள்ள பாதாள உலகக் குழுவினரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடம் ஏறும் சகல சந்தர்ப்பங்களிலும் நாட்டில் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் அதிகரிக்கின்றன.இம்முறையும் அதே நிலைமை உருவாகியுள்ளது.பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தேசிய அமைப்புக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வரும் எமக்கு எதிராகவும் பாதாள உலகக் குழுவினரைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சாத்தியமுண்டு என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.