ஹிக்கடுவயில் துப்பாக்கியுடன் இளைஞர் கைது!

95 0

ஹிக்கடுவ, பபகொஸ்ஸ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில்  துப்பாக்கியுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி  நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெட்டியகொட பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.