மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றதைப் போல, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும் தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணைக்காக இந்தியத் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு, இந்த வழக்கை மறுவிசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீதையும், லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஜகியூர் ரஹ்மான் லக்வியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் ,”ஹபீஸ் சயீதுக்கு எதிராக உறுதியான ஆதாரத்தை இந்தியா அளித்தால், அவரை விசாரிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. லக்விக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததாலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.
ஹபீஸ் சயீது உள்ளிட்ட 5 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தது.
இந்நிலையில், இந்தியா இவ்வாறு வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

