இலைகள் இல்லாத பூவினம் இலங்கையில் கண்டுபிடிப்பு

89 0

இலங்கைக்கே உரித்தான புதிய ஓர்கிட் இனமொன்று அண்மையில் சப்ரகமுவ மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வொன்றின் மூலம் இந்த ஓர்கிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓர்கிட் இனம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இலங்கைக்கே உரித்தான ஓர்கிட் இனங்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த ஓர்கிட் இனங்களின் எண்ணிக்கை 194 ஆகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்த ஓர்கிட் இனத்திற்கு இலைகள் கிடையாது, பூ மட்டுமே வெளிவருகிறது.

இத்தாவர இனம் புஷ்பராகம் வகையைச் சேர்ந்த மாணிக்கக்கற்களின் நிறத்தை ஒத்ததாக இருப்பதுடன் மாணிக்கக்கல் காணப்படும் இரத்தினபுரி பிரதேசத்தில் காணப்பட்ட காரணத்தாலும் சூழலியலாளர்கள் இதனை புஷ்பராகம் என அழைக்க முன்வந்துள்ளனர்.

இலைகள் இல்லாத பூவினம் இலங்கையில் கண்டுபிடிப்பு:சிறப்பம்சங்கள் என்ன..! | Discovery Of A New Species Of Orchid In Sri Lanka

வெகுவிரைவில் இந்த தாவர இனம் பற்றிய வெளியீட்டு வைபவம் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் பேராதனைப் பல்கலைக்கழக ஆய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாவர இனம் பற்றிய ஆய்வுகள் இன்னும் பலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.