யாழ். நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலசம் திரை நீக்கம்

14 0

நாவற்குழி ஸ்ரீ சமித்தீ சுமண விகாரையின் கலச திரை நீக்கம் இன்றைய தினம் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பங்குபற்றுதலுடன் பௌத்த ஆகம முறைப்படி சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றது.

இதன் பொழுது சிங்கள மக்கள், பௌத்த துறவிகள், இராணுவ அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்த நிலையில் விசேட பௌத்த நிகழ்வுகளும் இடம்பெற்றது.