கிளிநொச்சி மாவட்டத்தில் 59 ஆயிரத்து 103 மெற்றிக் தொன் நெல் அறுவடை

71 0

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த கால போகத்தில் 59 ஆயிரத்து 103 மெற்றிக் தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் உள்ளிட்ட பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர் பாசன குளங்களின் கீழும் மானாவாரி பயிர் செய்கை நிலங்களின்  கீழும் இம்முறை மொத்தமாக 26 ஆறாயிர்த்து 582 கெக்ரேயர் நிலப்பரப்பில் காலப்போக நெற்செய்கை  மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மிகக் குறைந்த விலைகளிலேயே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது தொடர்ந்தும் நெல்லுக்கான  உரிய விலை கிடைக்காமையினால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த கால போக அறுவடையின் போது 59103.85 மெற்றிக் தொன் நெல்  அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த பெரும் போகத்தின் போது 26585.40 கெக்ரேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வரட்சி மற்றும் நோய்த்தாக்கம்  இயற்கை அழிவுகள்  தவிர 25919.20 கெக்ரேயர்  நிலப்பரப்பில்  அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அறுவடைகளின் மூலம் 59103.85 மெற்றிக் தொன் நெல்  மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.