“அங்கொட லொக்கா” வின் மரணம் முடிவுக்கு வந்தது

134 0

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்று 2020ஆம் ஆண்டு மரணமான பாதாள உலகக் குழு உறுப்பினரான அங்கொட லொக்கா என்ற மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் மரணம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

எனினும் அங்கொட லொக்காவுடன் வாழ்ந்த அமானி தஞ்சி என்ற இலங்கைப் பெண் உட்பட எட்டு பேருக்கு எதிரான இரண்டாவது வழக்கின் விசாரணை தொடர்கிறது.

இந்திய புலனாய்வுத்துறையினரின் கண்டுபிடிப்புகளின் படி பிரதீப் சிக் என்ற பெயரில் கோவையில் சேரன் மா நகருக்கு அருகிலுள்ள பாலாஜி நகரில் வாடகை வீட்டில் வசித்த அங்கொட லொக்கா 2020 ஜூலை 3 ஆம் திகதியன்று இரவு மாரடைப்பால் மரணமானார்.

இந்த நிலையில் தஞ்சி மற்றும் ஏழு பேர் மீது பொய்யான ஆவணங்களை அளித்தல், குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தல், குற்றவியல் சதி மற்றும் போலியான பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

அங்கொட லொக்கா கோயம்புத்தூரில் பிரதீப் சிங்காக சுமார் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி டி.சிவகாமசுந்தரி மற்றும் அவரது நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த எஸ்.தியானேஸ்வரன் ஆகியோர் அவருக்கு பிரதீப் சிங் பெயரில் ஆதார் அட்டை பெறுவதற்கு அவருக்கு உதவியதாக கூறப்படுகிறது.

விசாரணையின் முன்னேற்றத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட மீதமுள்ள ஏழு பேருக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.