ரயிலில் கைவிடப்பட்ட கைக்குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

97 0

ரயிலில் கைக்குழந்தையை கைவிட்டு சென்ற பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 நாள் கைக்குழந்தையை ரயிலில் விட்டுச்சென்றவர்கள்  தாங்கள் சட்டப்படி திருமணம் செய்யவுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளதுடன் குழந்தையை தங்களுடன் வைத்து பராமரிப்பதற்கான அனுமதியையும் கோரியுள்ளனர்.

கைக்குழந்தையை ரயிலில் கைவிட்டு சென்றவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இருவரும் குழந்தையை பொறுப்பேற்க தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சட்டப்படி திருமணம் செய்வதற்கு தயாராகிவருவதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து கொழும்பு கோட்டை நீதிவான் திலினி கமகே குழந்தையை பெற்றோரிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 21 ஆம் திகதி பெற்றோர் குழந்தையுடன் மரபணுபரிசோதனைக்காக ஆஜராகவேண்டும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.