உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

238 0

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதியன்று கந்தகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு  அமைய குறித்த பகுதியில் பொலிஸார் சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்  பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) ஆஜர்படுத்தப்பட்டார்.