பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி, எதிர்க் கட்சி உறுப்பினராக இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடம் கோரினார்.
எனினும் தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும்கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை மறைத்து வருகின்றார்.
தமது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிடுகின்றன என்றார்.

