சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகு ஒத்திவைப்பு(காணொளி)

307 0

 

எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்  உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆட்கொண்ர்வு மனு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இன்றையதினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவரத்தன  மன்றில் முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட பன்னிரண்டு பேர் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.