வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில்…(காணொளி)

332 0

 

மாலபே தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்திற்கான தனியார் கற்கை நிறுவனத்திற்கு எதிராக வடக்கு மாகாண வைத்தியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணிவரை 24 மணிநேரம் வைத்தியர் சங்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சைற்றம் நிறுவனத்தில் கல்வி கற்றவர்கள் இலங்கை வைத்தியர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் அரச வைத்திய சங்கத்தினர் தொடர்ந்தும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் சைற்றம் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது சைற்றம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சி பெறுவது 6 மாத காலங்களுக்கு புதிய மாணவர்களை வகுப்புக்களில் இணைத்துக் கொள்ளுவதை நிறுத்துவது போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்ட நிலையில் இன்றையதினம் வடக்கு வைத்தியர்கள் சைற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலைகளில் அத்தியவசிய சேவைகள் தவிர்ந்து ஏனைய சேவைகள் இடம்பெறவில்லை.