அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறைகிறது

106 0

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றபோதும் இதன் மூலமான நன்மைகள் நுகர்வோரான மக்களுக்கு கிடைக்குமென தெரிவித்த அவர், இறக்குமதியாளர்களுக்கான பாதிப்பு பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தெரிவித்த அவர், நாட்டில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைந்துள்ளன. அவற்றை மேலும் குறைப்பதற்கு எதிர்வரும் வாரங்களில் நடவடிக்கை  எடுக்க முடியும்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைவடையும் போது இறக்குமதியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

எனினும், எதிர்காலத்தில் அவர்கள் இறக்குமதி செய்யவுள்ள பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு, நிவாரணங்களை வழங்க முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.