கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் குதிப்பு

227 0

கேப்பாபுலவு மக்கள் தமது பூர்விக நிலம் கோரி  நேற்று  காலை முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர் இப்போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

கேப்பாபுலவு பிரதேசத்தில் 128 குடும்பங்களுக்கு சொந்தமான, காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் போராட்டத்தை கேப்பாபுலவு மக்கள் ஆரம்பித்துள்ளனர்.

கேப்பாபுலவு பிரதேசத்தில் சீனியாமோட்டை, சூரிபுரம், ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், புலவுக்குடியிருப்பு காணிகள்  நேற்று  விடுவிக்கப்பட்டது இருப்பினும் தமது கேப்பாபிலவு காணிகள் இதுவரை விடுவிக்கவில்லை என கோரி மக்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

கேப்பாபிலவு கிராம அலுவலர் பிரிவில் நான்கு கிராமங்கள் காணப்படுகிறது சீனியாமோட்டை, சூரிபுரம், புலவுக்குடியிருப்பு. கேப்பாபுலவு. இவற்றில் மூன்று கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது இருப்பினும் தாம் ஆறு தலைமுறையாக வாழ்ந்துவரும் எமது பூர்விக நிலம் எமக்கு விடுவிக்கவேண்டுமென கோரியே இப்போராட்டம் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.