முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி சங்க லண்டன் கிளையின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மகாவித்தியாலய சிரேஸ்ர பழைய மாணவர்களின் அனுசரணையோடு முல்லைத்தீவு கல்விவலயத்துக்குட்ப்பட்ட 6 பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 32 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லை வலைய பிரதிக்கல்வி பணிப்பாளர் ஞா ஆதவன் அவர்கள் கலந்துகொண்டு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தார்
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

