முன்னாள் பெண் போராளி வெளிநாடு செல்வதற்கு உதவி பொலிஸ் உத்தியோகத்தர் கைது

147 0

முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க பெண்போராளியொருவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாட்டிற்கு செல்வதற்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த குறிப்பிட்ட தான் வெள்ளவத்தையில் வசிப்பதாக போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் உதவியதாக  அவரை கைதுசெய்த பயங்கரவாத விசேட பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலையை சேர்ந்த பெண் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவேளை கைதுசெய்யப்பட்டார் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.