சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்குக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது தலைமைத்துவத்தின் கீழ் சீனா பாரிய முன்னேற்றமடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்து செய்தியில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார சவால்களில், குறிப்பாக சர்வதேச நாணய நிதியச் செயற்பாடுகளில் சீனாவின் ஆதரவை தனது வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவு கூர்ந்துள்ளார்.
அத்தோடு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் புதிய பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான வலுவான ஒத்துழைப்பு தொடர்ந்து மேம்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

