34வது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது.நேற்று இந்த மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதி உதவிய ராஜாங்க செயலாளர் எரின் பார்க்லே, இலங்கையின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையின் மீதும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறிப்பாக ஜனநாயக நாடுகளது மனித உரிமைகள் சார்ந்த செயற்பாடுகளை கையாளும் போது, மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக நடந்து கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

