ஜெனீவா பிரேரணை அமுலாக்கம்: கால அவகாசத்திற்கு பூரண உடன்பாடு இல்லை – த.தே.கூ

337 0
ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பூரண உடன்பாடு இருக்கிறது என்று கூற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் இணக்கமின்மையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிடம் வெளிப்படுத்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பிரேரணையின் அமுலாக்கம் தற்போது எந்த மட்டத்தில் இருக்கிறது? என்பதை மனித உரிமைகள் பேரவை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.