திட்டமிடப்பட்ட தேர்தலை அரசு ஒத்திவைப்பது இதுவே முதல் முறை

89 0

அரசாங்கம் என்ற வகையில் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைப்பது இதுவே முதல் முறை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ள சந்தர்ப்பம் இதுவாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி என்ற ரீதியிலும் அரசாங்கம் என்ற ரீதியிலும் தமக்கு அரசியலமைப்பின் மூலம் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தேர்தல் நடத்தப்படும் போது தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குவது அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் பயணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் பயண வரலாற்றில் இது ஒரு பெரிய கரும்புள்ளியாக குறிப்பிடப்படுகிறது. புத்தகம் எழுதுபவர்கள், நாட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமையை வேண்டுமென்றே பறித்ததாக ஒரு நாள் எழுதப்படும் என்றும் அவர் கூறினார்.