ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்கிறது அரசாங்கம்

232 0

சந்தையில் அரிசி பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மேலதிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதற்கமைய, கூட்டுறவு மொத்த விற்பனவு நிறுவனத்தின் மூலம் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.

மாதாந்தம் 20,000 மெற்றிக் தொன் என்ற வகையில் கட்டம் கட்டமாக அரிசியை இறக்குமதி செய்து சதொச கிளைகள் ஊடாகவும், பகிரங்க சந்தையிலும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் ஏற்கனவே ஒரு இலட்சத்து 13,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளது.