மொட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அரசியல் சாராத ஒருவரை நியமிக்குமாறு பரிந்துரை

236 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் பதவிக்கு அரசியல் சாராத சிவில் சமூக பிரஜையொருவரை நியமிப்பதற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான நபரொருவரை நியமிப்பதற்கே பலரும் கோரிக்கைளை முன்வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை பதவி வெகுவிரைவில் பூரணப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட கட்சியை புறந்தள்ளிவிட்டு சென்ற எவருக்கும் எந்த பதவிகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.