முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் அறிவுறுத்தல்

67 0

நாடளாவிய ரீதியிலுள்ள பல மாவட்டங்களில் வளி மாசடைவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பில் காற்று தரக்குறியீடு 712 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம் ஊதா நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் இக்குறியீட்டு எண் கடும் சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது. இதே வேளை மன்னார் மாவட்டத்தில் காற்றின் தரக் குறியீடுகள் 103 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு , சுகாதாரமற்ற நிலையைக் காண்பிக்கின்றது.

இவை தவிர பதுளை, காலி , புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களிலும் இவ்வாறு வளி மாசடைவு ஏனைய நாட்களுடன் ஒப்பிடும் போது சற்று அதிகமாகக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வளி மாசடைவு காரணமாக வெளியிடங்களுக்குச் செல்பவர்களை முகக் கவசம் அணிந்து செல்லுமாறும் , சுவாச நோய் காணப்படுவர்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் சுகாதார தரப்பு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.