ஸ்டாலினின் வாழ்க்கையும் அரசியல் பயணமும் ஒன்றுதான்

164 0

முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையும் அரசியல் பயணமும் ஒன்றுதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மநீம தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்த, முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டு கால பயணத்தைச் சொல்லும் இந்தப் புகைப்பட கண்காட்சி நாளை (மார்.12) வரை நடைபெறுகிறது.

இந்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 11) நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் உள்ள புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்ட ரஜினிகாந்த் முதல்வர் மிசாவில் கைதாகி சிறையில் இருக்கும் காட்சிகள் பொம்மையாக வடிவமைத்துள்ள இடம், மற்றும் சில புகைப்படங்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அருமையான சேகரிப்பு( Superb Collection’s).. என்ன ஒரு நினைவு (what a memory) என பார்வையாளர்கள் பதிவேட்டில் பதிவு செய்தார்.