கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் ஆபத்தான வெடிபொருட்கள் – பாதுகாப்பாக மீட்குமாறு மக்கள் கோரிக்கை

189 0

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் ஆபத்தான நிலையில் பெருந்தொகையான எறிகணைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள்  காணப்பட்டுள்ளன.

கிளிநொச்சி ஏ-9 வீதிக்கு அண்மித்த ஆனையிறவுப் பகுதியில் அதாவது தற்போது வணிக சுற்றுலா மையம் அமைந்துள்ள வளாகத்தில்  குறித்த வெடிபொருட்கள் காணப்படுகின்றன.

 

இவ்வாறு ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற வெடிபொருட்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.