சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பினர் இன்று காலை பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.





வரி அதிகரிப்பு, பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றம் , மின்சார கட்டண அதிகரிப்புக்கு மற்றும் தேர்தலை பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

