பெண்கள் மீதான பார்வை குறித்து வீட்டிலிருந்தே மாற்றம் தொடங்க வேண்டும்

178 0

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல அலுவலகம் மற்றும் சென்னை பத்திரிகைதகவல் அலுவலகம் ஆகியவை சென்னைப் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து 3 நாள் மாநாடு மற்றும் புகைப்படக் கண்காட்சியை நடத்துகின்றன.

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் கல்வி நிறுவனத்தில் நேற்று தொடங்கிய புகைப்படக் கண்காட்சியை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சுந்தர் தொடங்கி வைத்தார்.

விழாவில், அவர் பேசும்போது, ‘‘அந்தக் காலத்திலேயே பெண்கள் நாட்டின் சுதந்திரத்துக்காகவும், சமுதாய உரிமைக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். நாட்டின் முன்னேற்றத்துக்கு பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இன்றைக்கும் பெண்களுக்கு பிரச்சினைகள் உள்ளன.

எனவே, பெண்கள் மீதானபார்வை குறித்து வீட்டிலிருந்தேமாற்றத்தைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். பெண்கள் சொந்தக் காலில் நிற்கநிதி சார்ந்த ஸ்திரத்தன்மையுடன் திகழ வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, குஷ்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘பெண்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், சமையல்அறையில் புகையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.

இதன்மூலம், நாட்டில் உள்ள 5 கோடிபெண்கள் பயன் அடைந்துள்ளனர். அதேபோல், முத்ரா கடன் திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் தொடங்குவதற்கு வசதியாக ரூ.10லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. முஸ்லிம் பெண்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற முறையில், பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை வாங்கிக் கொடுப்பதோடு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பேன்’’ என்றார்.

விழாவில், டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.ஆர்.ஆர். ராம்நாத், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர்சுதா சேஷயன், நாரி சக்தி விருது பெற்ற ஸ்கார்ஃப் (ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை) இணை நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் டாக்டர்.

தாரா ரங்கசாமி, தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்தலைமை இயக்குநர் (தென் மண்டலம்) எஸ்.வெங்கடேஸ்வர், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் எம்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.