பதவி நீக்கம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு ஏதுவும் கிடைக்கவில்லை

95 0

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவி நீக்கம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை எனக்கு கிடைக்கப்பெறவில்லை.

பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் நகைப்புக்குரியன என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் இன்று (06) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளராக நான் இன்றும் பதவியில் உள்ளேன் என்னை பதவி நீக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் ஊடகங்களில் குறிப்பிட்டுக் கொள்கிறார்.

பதவி நீக்கியதாக இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை கிடைக்கப் பெறவில்லை.

தவிசாளர் தவிசாளர் பதவியில் இருந்து என்னை நீக்கும் தீர்மானம் பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

உத்தியோகபூர்வமாக எடுத்த தீர்மானத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கலாம்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் நகைப்புக்குரியன.

பதவி நீக்கம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால் பல விடயங்களை பகிரங்கப்படுத்தி சட்டத்தின் ஊடாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பேன்.உத்தியோகபூர்வ அறிப்பை எதிர்பார்த்துள்ளேன் என்றார்.