புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம்!

240 0

இலங்கையின் பொருளதாரத்திற்கு வெளிநாடுகளில் தொழில்புரியும் புலம்பெயர் இலங்கையர்கள் உதவி வருகின்றனர்.

இதன் காரணமாக, புலம்பெயர் இலங்கையர்கள் நாடு திரும்பிய பின்னர் ஓய்வூதியமும், வெளிநாடுகளில் இருந்துகொண்டே வாக்களிப்பதற்கான வாய்ப்பையும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த ஓய்வூதியத் திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும், அமைச்சரவையால் முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆவணங்கள் அரசாங்க பொது வருவாய்த் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் புலம்பெயர்த் தொழிலாளர்களால் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் 2015ஆம் ஆண்டு அறிக்கையின் படி, புலம்பெயர்த் தொழிலாளர்களால் இலங்கைக்கு 750 கோடி அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் உள்ள 1.7 மில்லியன் புலம்பெயர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து வாக்களிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் கலந்துரையாடியுள்ளதாகவும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உரிமை அமைப்பின் தலைவர் சுனில் ஹெந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை வழங்குவது தொடர்பிலான இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.