அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

232 0

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இதுவேளை இப்போராட்டம் தொடர்பில் பட்டதாரி என்பவர் எஸ்.எச்.எம்.யூனுஸ் கருத்து தெரிவிக்கையில்,எமக்கு நிரந்தரமான உண்மையான உறுதிமொழி வழங்கப்பட்டு உரிய தீர்வு கிடைக்கும்வரை எமது காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

பெரும் கஷ்டப்பட்டு பட்டதாரி பட்டம் பெற்று இத்தனை வருடங்களாக தொழிலுக்காக காத்திருக்கவேண்டிய துரதிஷ்ட்டம் இலங்கையில் மட்டுமே உள்ளது.பட்டதாரியாக வெளியேறும் மாணவர்களுக்கு உடனடியாகவே தொழில்களைப் பெற்றுக் கொடுத்திருந்தால் இன்று இப்பிரச்சினை வந்திருக்காது.

மேலும் தமிழ்வின் இணையமானது எமது போராட்டத்தின் ஆரம்ப நாளிலிருந்தே ஊடக ஒத்துழைப்பை சிறப்பாக வழங்கிவருகின்றது. அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.இப்போராட்டம் தொடர்பில் பட்டதாரி ஏ.எம்.பாஹிம் கருத்து தெரிவிக்கையில்,அரசியல் பிரமுகர்கள் யாரென்பதை நாம் கண்டுகொண்டோம். வெறும் பொய் வாக்குறுதிகளை நம்ப நாம் முட்டாள்களல்ல.மேலும் பல அரசியல் பிரதிநிதிகள் எம்மை வந்து பார்க்கவே இல்லை. தேர்தல்வருகின்ற நேரங்களில் மட்டும் எம்மை நாடுவார்கள். பின்பு அவர்களை நாம் வலைபோட்டுத்தேட வேண்டும்.

நாம் 3வது நாளாக மழையிலும் வெயிலிலும் காய்ந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். எங்களின் நிலைமைகளை தெரிந்துகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். எனவும் குறிப்பிட்டார்.