குருந்தூர் மலை யாருக்கு சொந்தம்?

180 0

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதி­தாக எவ்விதமான நிர்மாணங்களையும் செய்­யக் கூடாது என கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் திகதி மாவட்ட நீதி­வான் நீதி­­­மன்றம் கட்டளையை பிறப்பித்தி­ருந்­தது.

இந்தக் கட்டளையை வலுச்சேர்க்கும் வகை­­­யில் நவம்பர் மாதம் 24ஆம் திகதி பிறி­தொரு கட்டளையும் பிறப்பிக்­கப்­பட்டி­ருந்தது. இந்நிலையில் நீதிமன்றக் கட்ட­ளைகள் புறக்­­கணிக்கப்பட்டு தற்பொழுது குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

புரா­தன சமய பண்­பா­டுகள் நிறைந்த வர­லாற்றுத் தல­மான குருந்தூர் மலை விவ­கா­ரத்தால் அண்மைக் கால­மா­கவே இந்து – பெளத்தம் மற்றும் தமி­ழர்கள் – சிங்­க­ள­வர்கள் என இரு துரு­வ­ம­யப்­பட்ட சமூ­கத்­தி­னரின் மத்­தியில் சர்ச்­சைக்­கு­ரிய தக­வல்கள் புற்­றீசல் போல் வெளிக்­கி­ளம்­பிய வண்­ண­முள்­ளன.

உண்­மையில், குருந்தூர் மலையின் ஆதி­கால வர­லாறு என்ன? ஆரம்ப காலத்தில் எத்­த­ரப்­பினர் அங்கே ஆதிக்கம் செலுத்­தினர்? எந்த சமய பண்­பாடு அங்கே நில­வி­யது என்­­­பதை பற்றி சுருக்­க­மாக விளக்­கு­கிறார், வர­­லாற்று ஆய்­வாளர் கலா­நிதி என்.கே.எஸ். திருச்­­­செல்வம்.

சூடு­பி­டித்­தி­ருக்கும் குருந்தூர் மலை விட­யம் தொடர்­பாக வீர­கே­ச­ரிக்கு அவர் கருத்­து­ரைக்­கையில்,

“முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் நெடுங்­கேணி எனும் இடத்­தி­லி­ருந்து வட­கி­ழக்குப் பக்­கத்தில் சுமார் 14 கி.மீ தூரத்தில் தண்­ணி­மு­றிப்பு குளம் அமைந்­துள்­ளது. அந்த குளத்தின் வடக்கு பக்­கத்தில் தான் குருந்தூர் மலை உள்­ளது. இந்த மலைக்கு குருந்­தனூர் மலை என்­றொரு பெய­ரு­முண்டு.

இந்த மலையில் சுமார் 200 ஏக்கர் பரப்­ப­ளவில் காணப்­பட்ட பழங்­கால கட்­டட இடி­பா­டு­க­ளுக்கு  மத்­தியில் அங்கே ஆதி ஐயனார் எனும் சிவனை தெய்­வ­மாக கருதி இந்து மக்கள் வழி­பட்டு வந்­தனர்.

அதே­வேளை ஆதி ஐய­னா­ருக்கு பூசைகள் செய்து, படையல் வைத்து வழி­படும் முறை­யும் வழக்­க­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.

இத்­த­கைய சூழ்­நி­லையில் அந்த இடத்­துக்கு வந்த பௌத்த பிக்­குகள் சிலர் மலையில் காணப்­பட்ட இடி­பா­டு­களை பார்த்து, “இது எமது பௌத்த வழி­பாட்­டுக்­கு­ரிய இடம்” என கூறி­யதை தொடர்ந்தே, குருந்தூர் மலை தொடர்­பான பிரச்­சி­னைகள் ஆரம்­ப­மா­யின.

அத­னை­ய­டுத்து அங்கு இரா­ணு­வத்­தோடு இணைந்து தொல்­பொருள் திணைக்­களம் அகழ்­வா­ராய்ச்சிப் பணி­களை மேற்­கொள்ள தொடங்­கி­யது.

குறிப்­பாக, இந்த மலையின் உச்­சியில் பௌத்த தூபி இருந்­தி­ருக்­கக்­கூடும் என கரு­தப்­பட்ட இடத்தில் ஆய்வுப் பணி­களை முன்­னெ­டுத்­தது.

இவ்­வாறு அகழ்வுப் பணிகள் தொடர்ந்­த­போது அந்த இடத்தில் எட்டு வரி­களை கொண்ட ஓர் உருளை வடிவ தொல்­பொருள் சின்னம் காணப்­பட்­டது.

உடனே, இது பௌத்த தூபிக்­கு­ரிய ‘யூப்ப கல’ என தொல்­பொருள் ஆய்­வா­ளர்கள் கூறி­னர்.

யூப்ப கல அல்­லது யூப்ப ஸ்தம்பம் என்றால் பழங்­கா­லத்தில் பௌத்த தூபியின் உச்­சியில் அமைக்­கப்­படும் ஒரு கற்தூண் ஆகும்.

எட்­டுத் திக்கும் உள்ள காவல் தெய்­வங்­க­ளுக்­காக இந்த தூண் தூபியின் உச்­சியில் வைக்­கப்­ப­டு­வது பழங்­கால கட்­டு­மான வழக்­க­மாக இருந்­தது.

இது­போன்ற தூண்கள் 5ஆம் நூற்­றாண்­டுக்கு முன்னர் தூபி­களில் காணப்­பட்­டன. அவற்றை தற்­போது பார்த்தால், கரடு முர­டான தோற்­றத்­தி­லேயே இருக்கும். மிஹிந்­த­லையில் இத்­த­கைய யூப்ப ஸ்தம்­ப­மொன்றே உள்­ளது.

எனினும், 5ஆம் நூற்­றாண்­டுக்குப் பின்­ன­­ரான காலங்­களில் இந்த தூண்­களை அமைக்கும் வழக்கம் இருக்­க­வில்லை. எனி­னும், யூப்ப கல தூணுக்கு பதி­லாக ‘தேவதா கொட்­டுவ’ எனும் சதுர வடிவ அமைப்பே காணப்­பட்­டி­ருக்­கி­றது.

குருந்தூர் மலை அகழ்­வின்­போது வெளிப்­பட்ட இந்த கல்லின் மேற்­ப­குதி எட்டுப் பட்டை (வரிகள்) கொண்­டது எனவும், அடிப்­ப­குதி சதுர வடி­வா­னது எனவும் கூறப்­ப­டு­கி­றது. இந்த உருளை போன்ற கல்லை பௌத்த தூபிக்­கு­ரிய யூப்ப கல என சிங்­கள தரப்­பினர் கூறினர்.

ஆனால், இது யூப்ப ஸ்தம்பம் அல்ல என்­ப­தற்கும் ஆதாரமான குறிப்­புகள் உள்­ளன.

‘புராண அப­ய­கிரி விஹா­ரய’ என்ற நூலில் பேரா­சி­ரியர் டி.ஜி.குல­துங்க ‘யூப்ப ஸ்தம்பம்’ என்­பது பண்­டைய தூபிகள் அனைத்­திலும் கட்­டா­ய­மாக அமைக்­கப்­பட வேண்­டிய ஒரு பாகம் அல்ல எனவும் சேரு­வில தூபி, சாஞ்சி தூபி, ருவன்­­வ­லி­சாய தூபி போன்ற தூபி­­களில் இந்த அமைப்பு இருந்­த­தற்­கான குறிப்பில்லை எனவும் தெரி­வித்­துள்ளார்.

அதே­போல மிகப் பெரிய பழை­மையான ஜேத­வ­ன­ராம போன்ற தூபி­க­ளிலும் ‘யூப்ப கல’ இருக்­க­வில்லை. அப்­ப­டி­யாயின், குருந்­தூர் மலையிலுள்ள இந்த உரு­ளை­வடிவ கல் ‘சிவ­லிங்கம்’ தான் என்­பதே உண்மை. அதுவும் அந்த லிங்கம் பல்­லவர் கால கட்­ட­­டக்­கலை பாணியை கொண்ட எட்­டுப்­பட்டை தாரா­லிங்கம்.

தாரா­லிங்­கத்தில் மூன்று வகைகள் உள்­ளன. அவற்றில் எட்டு பட்­டை ­­கள் அல்­லது வரிகள் கொண்ட தாரா­லிங்­­­கங்கள் இரண்­டா­வது வகையை சேர்ந்­தவை.

இது­போன்ற பல தாரா­லிங்­கங்கள் தமிழ­­கத்­திலும் உள்­ளன. எனவே, குருந்தூர் மலை­யில் காணப்­ப­டு­வது சிவ வழிபாட்டைக் குறிக்கும் தாரா­லிங்­கமே ஆகும்.

மேலும், இது பல்­லவர் காலத்­துக்கு முற்­பட்ட நாகர் கால லிங்க வடிவம் என பேரா­சி­ரியர் எஸ். பத்­ம­நாதன் தனது பேட்­டியிலும் கூறி­யி­ருந்­தார்.

அத்­துடன் இந்த லிங்­கத்தின் புகைப்­படத்தை  தமி­ழ­கத்தின் இரா­ம­நா­த­புரம் தொல்­லியல் ஆய்வு நிறு­வ­னத்தின் தலைவர் ராஜ­குரு வேலுச்­சா­மி­யிடம் காட்­டினேன். அவர் இதனை ‘எட்­டுப்­பட்டை அஷ்­ட­லிங்­கம்’ என தெரி­வித்தார்.

இத்­த­கைய ஆதா­ரங்­களை கொண்­டுள்ள லிங்கம் காணப்படும் இடத்தை ஆதி ஐயனார் கோவில் என தமி­ழர்கள் வழி­பட்டு வந்­தனர். இது சிவ­ வழிபாட்டுக்குரிய தலம் என்றும் இந்து சமயம் பின்­பற்­றப்­பட்ட இட­மெ­ன­வும் கூறினர். எனினும், அங்கு கோயில் கட்டப்­படவில்லை.

அதே­வேளை தொல்­லியல் திணைக்­களம் இதை பௌத்­தர்களின் வழிபாட்டுக்­கு­ரிய இடம் என்றும் பௌத்த தூபி இருந்த இடம் என­வும் உறு­தி­யாக குறிப்­பி­டு­கி­றது.

இத்­த­கைய சூழ­லி­லேயே குருந்தூர் மலை சர்ச்­சைக்­கு­ரிய இட­மா­னது.

எனினும், குருந்தூர் மலையில் இந்து, பௌத்தம் ஆகிய இரு மதங்­களும் இருந்­துள்­ளன என்­பதே பலர் நம்ப மறுக்கும் உண்மை.

குருந்தூர் மலையில் இரு மத வழி­பா­டு­களும்  நில­வி­ய­மைக்கு முக்­கியமான ஆதாரம், ஆங்­கி­லேயர் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­­வா­ராய்ச்­சியே எனலாம்.

ஆங்­கி­லேய ஆய்­வா­ளர்­க­ளான ஜே.பி. லூயிஸ், எச்.சி.பி. பெல் ஆகியோர் குருந்தூர் மலையில் ஆய்­வு­களை மேற்­கொண்டு சில குறிப்­பு­களை பதிவு செய்­துள்ளனர்.

அதன்­படி, குருந்தூர் மலையில் மிகப் பெரிய ஆவு­டையார் (லிங்­கத்தின் அடிப்­பாகம்) இருந்­த­தா­கவும், அத­ன­ருகில் கை கூப்­பி­ய­வாறு ஒருவர் அமர்ந்­தி­ருப்­பதை போன்ற சிலை, உடைந்த நந்தி சிலை, செங்­கல்­லா­லான பழங்­கால கிண­றொன்று இருந்­த­தா­கவும் குறிப்­பிட்­டுள்ள­னர்.

இதில் ஆவு­டையார் 3 அடி அக­லமும் 3.3 அடி நீளமும் கொண்ட சதுர வடி­வு­டை­யது. இதன் நடுப்­ப­கு­தியில் 1.1 அடி விட்­ட­முடைய குழி உள்­ளது. இதுவே வட்ட வடி­வ­மான லிங்கம் இருந்த பகு­தி­யாகும். இந்த ஆவுடையார் சோழர் காலத்­துக்­கு­ரி­யது என­லாம்.

இவை யாவும் சிவ வழி­பாட்டுத் தலத்தின் எச்­சங்கள் என அவர்கள் குறிப்­பிட்ட அதே­வேளை அங்கே ஒரு தூபியின் அடை­யாளம் இருந்­த­­தால், பௌத்த வழி­பாடும் இருந்­தி­ருக்­கிறது என்­பதை இத­னூ­டாக சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

இந்த இரு வழிபாடுகளுக்கும் உரிய ஆதார­மான ஆங்கில ஆய்வுக் குறிப்புகளை H.C.P.பெல் 1905­ஆம் ஆண்டு தனது ஆய்­வ­றிக்­கையில் 34ஆம் பக்­கத்தில் இவ்வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

A small nearly levelled dagaba.

A few stone pillars beside which lies the greatly damaged stone figure of a bull. This was probably a sivite temple.

A large yoni stone 3 ft. by 3 ft. 3 in. with a hole 1 ft.1 1/2 in. in diameter cut in it.

A brick well 4 ft. 6 in. wide and 25 feet deep. 20 feet being dry laid brickwork and the rest cut into soft rock.

A sedent figure in an attitude of prayer cut in bas-relief on a slab of stone 2 ft. 6 in. by 1 ft. 9 in. several pillar buildings with Naga-raja guardstones.

A brick building probably a Hindu Kovil, which has collapsed and become a mound.

These show a thorough mixture of buddhist and Hindu ruins.

எனவே, இவற்றின் அடிப்­ப­டையில் குருந்­தூர் மலையை இந்து மற்றும் பௌத்தம் ஆகிய இரு மத வழி­பாட்­டுக்கும் உரிய இட­மாக கரு­தலாம்.

அத்­தோடு கலிங்க மாகோன் என்ற மன்னன் ஆட்சி செய்த காலத்தில் குருந்தூர் மலையை அவன் படைத்­த­ள­மாக பயன்­ப­டுத்­தி­ய­தாக சூள­வம்சமும் குறிப்­பி­டு­கி­றது.

எனவே, வீர சைவத்தை போற்றி வழி­பட்ட கலிங்க மாகோன் காலத்தில் சிவன் கோவில் கட்­டா­ய­மாக இருந்­தி­ருக்க வேண்டும். அல்­லது சோழர் காலத்­திலே கட்­டப்­பட்ட சிவன் கோவில் மாகோன் காலத்தில் வழி­பாட்­டுக்­கு­ரி­ய­தாக காணப்­பட்­டி­ருக்க வேண்டும்.

அந்த வகையில், குருந்தூர் மலையில் சிவன் கோவில், பௌத்த தூபி இரண்டும் இருந்­துள்­ளன என்பது உறுதியாகத் தெரிகிறது.

எனவே, இந்­துக்கள், பௌத்­தர்கள் என இரு சாரா­ருக்கும் உரிய இட­மாக குருந்தூர் மலைப் பிர­தே­சத்தை கரு­தலாம்.

ஆயினும், அங்கு பௌத்த சமயம் மட்­டும் தான் இருந்தது என்பதை ஏற்க முடி­யாது. இதில் ஆதங்­கத்­துக்­கு­ரிய விட­யம் என்ன­வென்­றால்,

குருந்தூர் மலையில் காணப்­பட்ட சிவ வழிபாட்டுக்குரிய­ தொல்­லியல் சின்­ன­மான சதுர வடிவ ஆவு­டையார், தமிழ் சமூ­கத்தை சேர்ந்த சிலரால் வன்னி, குமு­ழ­முனை கிரா­மத்தில் உள்ள பிள்­ளையார் ஆல­யத்தில் வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆவு­டை­யாரில் லிங்கம் இருந்த குழிப் பகு­தியில் பிள்­ளையார் சிலையை வைத்­துள்­ளனர். இது மிகப் பெரும் தவறு.

குறிப்பிட்ட ஓரி­டத்தில் சமய வழி­பாட்­டுக்­கு­ரிய தொல்பொருள் சின்­ன­மொன்று காணப்­பட்டால், அந்த சின்­னத்தை அகற்றாமல், அதனை அங்­கேயே வைத்து, அந்த இடத்தில் கோயில் கட்டி வழி­படுவதே சரியானது. அதை விடுத்து, அச்சின்­னத்தை அங்­கி­ருந்து அகற்­று­வதும், அதை வேறோர் இடத்துக்கு எடுத்துச் சென்று வைப்­பதும் செய்­யத்­த­காத செய­லா­கும்” என்று கவலையுடன் தெரி­வித்­தார்.

மா. உஷாநந்தினி