காட்டு யானை தாக்கிய இரு வேறு சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.
02 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த யானை – மனித மோதல்களில் ஒரு சம்பவம் அம்பான்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறகாயாய பகுதியிலும், ஹேட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகஸ்வெவ பகுதியிலும் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு காட்டு யானை தாக்கிய சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் முறையே 57,41 வயதுடையவர்கள் ஆவர்.

