இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

169 0

இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் இன்று (03) பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி சாலையின் வருமானத்தை பாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில்  சேவைகளை  ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புல்மேட்டை ஊடாக திருகோணமலை செல்லும் எமது பேரூந்துக்கு முன்னால் விசுவமடுவில் இருந்து திருகோணமலைக்கு தனியாருக்கு சேவையாற்ற அனுமதித்தது.

இதுவரை காலமும் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இது வரை இ.போ.ச க்கு அனுமதி வழங்கப்படவில்லை.

என பல கோரிக்கைகளை முன்வைத்து குறித்த பணிப்பகிஸ்கரிப்பில் இன்று காலை முதல்   சாலை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்