வாகன விபத்துக்கள் மற்றும் நெருக்கடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்

128 0

மேல் மாகாணத்தில் இடம்பெறுகின்ற வாகன விபத்துக்கள் மற்றும் வாகன நெருக்கடி போன்றவற்றை தடுப்பதற்காக வாகன சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரை தெளிவுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை இலங்கை பொலிஸ் திணைக்களம் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் ஆலோசணைக்கமைவாக நடத்தப்படுகின்ற இந்த விசேட வேலைத்திட்டமானத, இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில்  உள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கியவாறு நடத்தப்படவுள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டத்தில், சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்குட்டபட்வர்கள்  வாகனத்தை செலுத்துதல், வாகன அனுமதிப் பத்திரம், காப்புறுதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், விதி விதிமுறைகளை மீறுதல், சுற்றுவட்டம் ஒன்றில் ஏற்படுகின்ற தவறுகள், நடைபாதைகளில் ஏற்படுகின்ற தவறுகள், பஸ் நிறுத்தங்களில் ஏற்படுகின்ற தவறுகள், தலைக்கவமின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், மின் சமிஞ்சை விதிகளை பின்பற்றாமை உள்ளிட்டவை குறித்து வாகன சாரதிகள், பயணிகள் மற்றம் பாதசாரிகள் ஆகியோருக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டங்களை உங்களது வேலைத்தளங்களில், பாடசாலை வேன் சாரதிகள் சங்கங்களில், வர்த்தக மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்பட  வேண்டுமாயின் மேல் மாகாண போக்குவரத்து பொலிஸ் பிரிவினரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.