சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி சென்னையில் மார்ச் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இஇபிசி இந்தியா சார்பில்10-வது சர்வதேச பொறியியல் கொள்முதல் கண்காட்சி (IESS)மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் 18-ம்தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. ‘திறன் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 149 தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த கண்காட்சி தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இஇபிசி-யின் தலைவர் அருண்குமார் கரோடியா, தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ், பெல்ஜியம் நாட்டின் வர்த்தக ஆணையர் ஜெயந்த் நாடிகர், இஇபிசி தெற்கு மண்டல தலைவர் ராமன் ரகு, மண்டல துணைத் தலைவர் ஷாஷி லிவிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ் கூறுகையில், “ஏற்றுமதியில் இந்தியாவில் 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த கண்காட்சி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை நிறுவனங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்” என்றார்

