திருகோணமலை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவராக மருத்துவர் ரவிச்சந்திரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத்தின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டம் நேற்றைய தினம் (01.03.2023) நடைபெற்றுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இச்சம்மேளனம் அரசசார்பற்ற நிறுவனங்களின் தேசியத் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்துள்ளது. ஆயினும் நிதி அனுசரணை பெறுவதில் பல தடைகள் ஏற்பட்டிருந்தன.
அவற்றைத் தவிர்க்கும் முகமாக மாவட்ட மட்டத்தில் பதிவு செய்யும் நோக்குடன் இந்த வருடம் கடந்த ஜனவரி மாதம் சம்மேளனத்தின் யாப்பினைத் திருத்திச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாகத் திருகோணமலை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவராக மருத்துவர் ரவிச்சந்திரன் இருந்து வந்துள்ளார். ஆயினும் அவர் தன்னுடைய முயற்சியாலும் சக அங்கத்தவர்களுடைய ஒத்துழைப்பினாலும் யாப்புத் திருத்தத்தினை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இன்று அவரது சேவையை பாராட்டும் விதத்தில் மீண்டும் அவரையே 2023/2025 காலப்பகுதியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2023-2025 காலப்பகுதிக்கான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்.
1. தலைவர் மருத்துவர் என்.ரவிச்சந்திரன் (ஹார்ட் சிலோன் பவுண்டேஷன்)
2. உபதலைவர் பொ.சற்சிவானந்தன் (திருமலை அகம்)
3. செயலாளர் ஏ.ஆர்.எம்.தஸ்லீம் (லீட்ஸ்)
4. உப செயலாளர் சத்துராணி மல்லவாராச்சி (ஷக்தி மகளிர்)
5. பொருளாளர் அ.கஜேந்திரன் (ஸ்ட்ரீட் சைல்ட் லங்கா)
நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் :
ஆர்.அரியரெட்ணம் (சிறுவர் அபிவிருத்தி நிதியம்), ஏ.எம்.எம்.பரீட் (பெடோ), எம்.டீ.எம்.பாரிஸ் (PSC), பீ.கே.ஏ.நிரோஷா (ECRDF), எம்.நூறுல் இஸ்மியா (3CD), ரா.பத்மினி (சர்வோதயா), திரு. டீ. சலீம் (முஸ்லிம் எய்ட்), ரா. நளினி (WSEC), எம்.எச்.லபீப் (அல்-வபா பவுண்டேஷன்)
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை சமூக சேவை உத்தியோகஸ்தர் திரு ஹபிபுல்லா, மாவட்ட சமூக சேவை உத்தியோகஸ்தர் திரு. பிரணவன் மற்றும் சர்வோதய தேசிய உப தலைவர் திரு வே. ஜீவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

