மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் – இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்

257 0

நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எதிர்க் கட்சிகள் தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன என்று இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி என்ற முறையில் மக்களை எவ்வாறு நெருக்கடிகளுக்குள் இருந்து மீட்டெடுப்பது என்பது தொடர்பில் திட்டங்களை வகுத்துள்ளோம்.

நாடு என்று வரும்போது பாரிய பொருளாதார நெருக்கடியொன்று காணப்படுகின்றது.

வெளிநாட்டுக் கடன்களுடன் அந்த கடன்களை மீளசெலுத்திக்கொள்ள முடியாத நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பாரிய பொறுப்புகள் காணப்பட்டன.

மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மக்கள் வீதிக்கு இறங்குவர்.

ஆளும் கட்சியானது மக்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டது.

விசேடமாக பொருளாதார நெருக்கடி, தேவையான எரிபொருள், மருந்துகள், எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதற்கு ஆளும்கட்சி என்ற முறையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

எனினும் எதிர்க் கட்சிகள் சுயநலபோக்குடன் செயற்படுகின்றன.

ஒரு புறத்தில் உள்ள10ராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தவறான வழியில் மக்களை திசைதிருப்புகின்றனர்.

மறுபுறத்தில் வரிச்சுமைகள் குறித்து கதைக்கின்றனர்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஆளும் கட்சி என்ற முறையில் எமது பொறுப்புக்களை நாம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.

பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதையும் நாம் புரிந்துகொண்டே இருக்கின்றோம்.